போட்டி அமைப்பு போட்டிப் பிரிவுகள்
01 ஆவணப் புகைப்படங்கள்
வெற்றிகரமான ஆவணப்படுத்துதல் பெறுமதிகளைக் கொண்ட புகைப்பட ஆக்கங்கள் இப்போட்டிப் பிரிவிற்காக ஏற்றுக்கொள்ளப்படும். ஏதேனும் ஒரு நிகழ்வை அல்லது விடயத்தை மிகவும் உத்தியோகபூர்வமான உண்மைத் தன்மையுடனும், வெளிப்பாட்டுத் தன்மையுடனும் சமர்ப்பிப்பதற்காக புகைப்பட சிந்தனை, கட்டமைப்பு (Composition) மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் இப்போட்டிப் பிரிவில் விசேடமாகக் கவனத்திற் கொள்ளப்படும். புகைப்படம் எடுக்கப்பட்ட கணத்தின் நம்பகத்தன்மையை மீறும் வகையில் பின்-செயலாக்க (Post-processing) வேலைகளுக்கு உட்படுத்தப்பட்ட புகைப்படங்களை இப்போட்டிப் பிரிவிற்கு சமர்ப்பிக்க முடியாது. ஒரு புகைப்படம் அல்லது புகைப்படக் கட்டுரை (Photo essay) அதன் "ஆவண ரீதியிலான நம்பகத்தன்மையை" மீறும் வகையில் பின்-தொகுப்பிற்கு (Post-editing) உட்படுத்தப்பட்டுள்ளது என நடுவர் குழுவினால் தீர்மானிக்கப்படும் பட்சத்தில், அந்தப் புகைப்படம் அல்லது புகைப்படக் கட்டுரையை போட்டியிலிருந்து நீக்குவதற்கான முழுமையான அதிகாரம் நடுவர் குழுவிற்கு உண்டு. நடுவர் குழுவினால் கோரப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், புகைப்படத்தின் நேரடிப் பதிவுக்குரிய மூல இலக்கவியல் கோப்பினை (RAW file / Original digital file) வழங்குவதற்கு புகைப்படக் கலைஞர் கடமைப்பட்டுள்ளார்.
02 இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் புகைப்படங்கள்
மிகவும் விசித்திரமான மற்றும் அழகியல் தன்மையுடனும், இயற்கையுடன் தொடர்புடைய பெறுமதிகள், நியாயமான மற்றும் உண்மையான வெளிப்பாடுகளாகவும் சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் இப்பிரிவின் கீழ் சமர்ப்பிக்கப்படலாம். புகைப்படம் எடுக்கப்பட்ட கணத்தின் நம்பகத்தன்மையை மீறும் வகையில் பின்-செயலாக்க (Post-processing) வேலைகளுக்கு உட்படுத்தப்பட்ட புகைப்படங்களை இப்போட்டிப் பிரிவிற்கு சமர்ப்பிக்க முடியாது. இயற்கையான நோக்கங்களை மிகவும் தீவிரமாக வெளிப்படுத்துவதற்கு புகைப்படக் கலைஞர் முற்பட்டுள்ளார் என நடுவர் குழுவினால் தீர்மானிக்கப்படும் பட்சத்தில், மனிதனால் உருவாக்கப்பட்டவை (Man-made elements) உள்ளடக்கப்பட்டுள்ள புகைப்படங்களும் இப்பிரிவின் கீழ் செல்லுபடியாகும் எனக் கருதப்படும். ஒரு புகைப்படம் அல்லது புகைப்படக் கட்டுரை (Photo essay) அதன் "ஆவண ரீதியிலான நம்பகத்தன்மையை" மீறும் வகையில் பின்-தொகுப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது என நடுவர் குழுவினால் தீர்மானிக்கப்படும் பட்சத்தில், அந்தப் புகைப்படம் அல்லது புகைப்படக் கட்டுரையை போட்டியிலிருந்து நீக்குவதற்கான முழுமையான அதிகாரம் நடுவர் குழுவிற்கு உண்டு. நடுவர் குழுவினால் கோரப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், புகைப்படத்தின் நேரடிப் பதிவுக்குரிய மூல இலக்கவியல் கோப்பினை வழங்குவதற்கு புகைப்படக் கலைஞர் கடமைப்பட்டுள்ளார்.
03 சமூக மற்றும் மனித அடையாளங்கள் சார்ந்த புகைப்படங்கள்
மனித சமூகம், மனித விழுமியங்கள், மனித உறவுகள் மற்றும் அடையாளங்கள், மனித வாழ்க்கை மற்றும் அதன் வாழ்வியலின் பல்வேறு காட்சிரீதியான பண்புகள் குறித்த விபரங்களை வெவ்வேறு கோணங்களினூடாக அவதானத்திற்குட்படுத்தும் புகைப்படங்கள் இப்போட்டிப் பிரிவிற்காக சமர்ப்பிக்கப்படலாம். பின்-தொகுப்புகளுக்கு (Post-editing) உட்படுத்தப்பட்ட, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அல்லது பல புகைப்படங்களை இணைத்து உருவாக்கப்பட்ட ஆக்கங்களையும் (Composite images) எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.
04 கருத்துருவாக்க மற்றும் ஆய்வுரீதியான
புகைப்படங்கள் புகைப்படம், புகைப்படக் கலை, புகைப்படத் தொழில்நுட்பம் அல்லது புகைப்படத்தின் தன்மை குறித்து ஆய்வுரீதியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமன்றி, புதிய கருத்துருவாக்க அணுகுமுறைகளினூடாக (Conceptual approaches) உருவாக்கப்பட்ட புகைப்படங்களும் இப்போட்டிப் பிரிவிற்காக ஏற்றுக்கொள்ளப்படும். பின்-தொகுப்புகளுக்கு (Post-editing) உட்படுத்தப்பட்ட, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அல்லது பல புகைப்படங்களை இணைத்து உருவாக்கப்பட்ட ஆக்கங்களையும் (Composite images) எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.
05 வருடாந்த கருப்பொருள் பிரிவு
ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு அமைய, போட்டியாளர்கள் தமது ஆக்கங்களைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 2026 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் "சவால்கள் (Challenges)" என்பதாகும். பின்-தொகுப்புகளுக்கு (Post-editing) உட்படுத்தப்பட்ட, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அல்லது பல புகைப்படங்களை இணைத்து உருவாக்கப்பட்ட ஆக்கங்களையும் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.
போட்டிப் பிரிவுகள்:
தனிப் புகைப்படங்கள்
புகைப்படக் கட்டுரைகள்
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து போட்டிப் பிரிவுகளுக்குள்ளும் தலா இரண்டு போட்டி அம்சங்கள் காணப்படுகின்றன. போட்டியாளர்கள் அனைத்து போட்டிப் பிரிவுகளுக்காகவும் இந்த இரண்டு அம்சங்களின் கீழும் தமது ஆக்கங்களைச் சமர்ப்பிக்க முடியும். தனிப் புகைப்படப் போட்டி அம்சம் தனியாகவும், ஆகக்குறைந்தது 3 புகைப்படங்கள் மற்றும் அதிகபட்சமாக 8 புகைப்படங்களுக்கு உட்பட்டு சமர்ப்பிக்கக்கூடிய புகைப்படக் கட்டுரை (Photo essay) அம்சம் தனியாகவும் நடுவர் தீர்ப்புக்கு உட்படுத்தப்படுவதுடன், வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதும் இந்த இரண்டு அம்சங்களுக்கும் தனித்தனியாகவே மேற்கொள்ளப்படும்.
போட்டி நிபந்தனைகளும் விபரங்களும்
I. இதற்கமைய, மொத்தம் பத்து போட்டித் துணைப் பிரிவுகளுக்காக (ஐந்து போட்டிப் பிரிவுகள் மற்றும் அவற்றுள் ஒவ்வொரு பிரிவுக்குமான தலா இரண்டு போட்டி அம்சங்கள்) அரச மட்டத்திலான மதிப்பீடுகள் இவ்விழாவில் மேற்கொள்ளப்படும். அனைத்து போட்டித் துணைப் பிரிவுகளுக்குமாக முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களும், அதேபோன்று ஐந்து பாராட்டுச் சான்றிதழ் இடங்களும் தேர்ந்தெடுக்கப்படும் என்பதுடன், ஏதேனும் ஒரு போட்டித் துணைப் பிரிவின் குறிப்பிட்டதொரு வெற்றி இடத்திற்குப் பொருத்தமான ஆக்கங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என நடுவர் குழுவினால் தீர்மானிக்கப்படும் பட்சத்தில், அந்த வெற்றி இடத்திற்கான பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படமாட்டாது. நடுவர் குழுவின் விசேட விருதுகள் ஏதேனும் இருக்குமாயின், அவை நடுவர் குழுவின் தீர்மானத்திற்கு அமைய, ஒரு போட்டித் துணைப் பிரிவிற்கு அதிகபட்சமாக ஒரு நடுவர் குழுவின் விசேட விருது மட்டுமே என்ற நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்படும்.
II. எந்தவொரு போட்டியாளரும் எவ்வித பாகுபாடுமின்றி எந்தவொரு போட்டிப் பிரிவிற்கும் தமது ஆக்கங்களைச் சமர்ப்பிக்க முடியும். ஒரு போட்டிப் பிரிவிற்காகச் சமர்ப்பிக்கக்கூடிய அதிகபட்ச ஆக்கங்களின் எண்ணிக்கை நான்காகும் (04). (தனிப் புகைப்படங்கள் மற்றும் புகைப்படக் கட்டுரைகள் அனைத்தினதும் மொத்த எண்ணிக்கை 4 அல்லது அதற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.)
III. அனைத்து ஆக்கங்களுடனும், தமது ஆக்கம் குறித்து பார்வையாளர்களுக்கு முன்வைக்கக்கூடிய, ஆகக்குறைந்தது 50 சொற்களுக்கு குறையாததும் 100 சொற்களுக்கு மேற்படாததுமான ஒரு குறிப்பினை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். இக்குறிப்பு இன்றி சமர்ப்பிக்கப்படும் ஆக்கங்கள் நிராகரிக்கப்படும்.
IV. ஒரே புகைப்படத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிப் பிரிவுகளுக்குச் சமர்ப்பிக்க முடியும் என்ற போதிலும், ஒரேயொரு ஆக்கத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் வெற்றி வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. ஒரேயொரு ஆக்கம் (ஒரு தனிப் புகைப்படம் அல்லது ஒரு புகைப்படக் கட்டுரை) பல போட்டிப் பிரிவுகளில் வெற்றிகளைப் பெற்றிருக்கும் பட்சத்தில், மிக உயர்ந்த ஒரு வெற்றி வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டு, அந்த ஆக்கம் ஏனைய பிரிவுகளின் சமமான அல்லது குறைந்த வெற்றி வாய்ப்புகளிலிருந்து நீக்கப்படும். ஒரே சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட, நடுவர் குழுவினால் தீர்மானிக்கப்படும் வகையில் குறிப்பிடத்தக்க அளவிலான வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை எனக் கருதப்படும் தொடர்ச்சியான புகைப்படங்களும் (Sequence/burst photos) சிறிய வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் கூட, ஒரே புகைப்படமாகவே கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
V. ஒற்றை நிற (Monochrome) அல்லது வர்ண (Color) புகைப்படங்களைச் சமர்ப்பிக்க முடியும். புகைப்படத்தின் நீளமான பக்கம் 1920 பிக்சல்களாக (Pixels) அல்லது அகலமான பக்கம் 1080 பிக்சல்களாக இருக்க வேண்டும் என்ற இரண்டு அளவுகோல்களில், ஆகக்குறைந்தது ஒன்றற்காவது அமைந்திருக்குமாறு புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
VI. புகைப்படக் கோப்பானது sRGB/AdobeRGB அல்லது AdobeRGB தரநிலையான வர்ண வரம்பிற்குள் (Color space) அமைந்திருக்க வேண்டும் என்பதுடன், ஒரு புகைப்படத்தின் அதிகபட்ச கோப்பு அளவு (File size) 2MB இற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
VII. ஆக்கத்தின் உள்ளடக்கத்துடன் தொடர்பில்லாத நீர் அடையாளங்கள் (Watermarks), திகதிகள், முத்திரைகள் போன்ற புற அடையாளங்கள் இடப்பட்ட புகைப்படங்கள் காணப்படின், அத்தகைய புகைப்படங்கள் போட்டியிலிருந்து நீக்கப்படும்.
VIII. காலதாமதமாகக் கிடைக்கப்பெறும் மற்றும் போட்டி நிபந்தனைகளுக்கு முரணான வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆக்கங்கள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி போட்டியிலிருந்து நீக்கப்படும்.
IX. ஏதேனும் ஓர் ஆக்கத்தின் நேரடிப் பதிவுக்குரிய மூல இலக்கவியல் கோப்பினை (RAW/Original digital file) கலாசார அலுவல்கள் திணைக்களம் கோரும் சந்தர்ப்பத்தில், அதனை வழங்குவதற்கு புகைப்படக் கலைஞர் தவறும் பட்சத்தில், அதுவே அந்த ஆக்கத்தைப் போட்டியிலிருந்து நீக்குவதற்கும், வெற்றி வாய்ப்புகளை வழங்காதிருப்பதற்கும் அல்லது வழங்கப்பட்ட வெற்றி விருதுகள், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை ரத்துச் செய்து மீண்டும் கையகப்படுத்துவதற்கும் போதுமானதொரு காரணமாகக் கருதப்படும்.
X. பதிவேற்றம் செய்யும் போதோ அல்லது பதிவிறக்கம் செய்யும் போதோ ஏற்படும் எந்தவொரு பாதிப்புக்கும் கலாசார அலுவல்கள் திணைக்களம் பொறுப்பேற்காது.
XI. ஏதேனும் ஒரு போட்டிப் பிரிவுக்குரிய நிபந்தனைகள், தொழில்நுட்பத் தரநிலைகள் மற்றும் அளவுகோல்களுக்கு இணங்க படைப்புகள் கிடைக்கப் பெறாத சந்தர்ப்பத்தில், சம்பந்தப்பட்ட போட்டிப் பிரிவுகளுக்கான பரிசுகள், சான்றிதழ்கள் அல்லது விருதுகளை வழங்காதிருப்பதற்கும், அதேபோன்று நடுவர் சபையினால் தீர்மானிக்கப்படும் சந்தர்ப்பத்தில், வழங்கப்பட்ட வெற்றி விருதுகள், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் உட்பட எவ்வகையான அங்கீகாரங்களையும் செல்லுபடியற்றதாக்கி அவற்றை மீண்டும் கையகப்படுத்துவதற்கும் நடுவர் சபைக்கு முழுமையான அதிகாரம் உண்டு.
XII. போட்டிக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்து படைப்புகளும், அதனைச் சமர்ப்பிக்கும் கலைஞரினால் மாத்திரம் படம்பிடிக்கப்பட்ட/உருவாக்கப்பட்ட படைப்புகளாக இருத்தல் வேண்டும். படைப்பின் உரிமைப்பாடு தொடர்பாக ஏதேனும் சட்டப் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில், நடுவர் சபையோ அல்லது கலாசார அலுவல்கள் திணைக்களமோ அதற்காக தலையிடாது.
XIII. போட்டிகளில் மோசடி செய்ய முயற்சிப்பதாக கண்டறியப்படும் போட்டியாளர்களை கறுப்புப் பட்டியலில் (Blacklist) சேர்ப்பதற்கு கலாசார அலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும்.
XIV. எந்தவொரு தனிநபரையும் அல்லது சமூகக் குழுவையும் பாரபட்சத்திற்கு அல்லது அநீதிக்கு உள்ளாக்கும் வகையிலான படைப்புகள் போட்டிக்கு சமர்ப்பிக்கப்படலாகாது. அத்தகையதொரு விடயம் தொடர்பாக ஏதேனும் விவாதத்திற்குரிய, சட்டரீதியான அல்லது சிக்கலான சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில், கலாசார அலுவல்கள் திணைக்களம் அதற்காக தலையிடாது என்பதுடன், அதன் முழுமையான பொறுப்பையும் போட்டியாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
XV. போட்டிக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்து படைப்புகளினதும் அறிவுசார் சொத்துரிமை கலைஞருக்குரியதாகும் அதேவேளை, அவற்றை விளம்பர நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கான உரிமை கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு உரித்தாகும்.
XVI. கடந்த காலங்களில் தேசிய புகைப்பட விழாக்களில் விருது பெற்ற புகைப்படங்களை மீண்டும் சமர்ப்பிக்கக் கூடாது.
XVII. போட்டியில் பங்குபற்றுவதானது அனைத்து போட்டி நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும்.
XVIII. இப்போட்டி, கண்காட்சி மற்றும் விருது விழா தொடர்பான அனைத்துக் கொள்கை ரீதியான தீர்மானங்களினதும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருக்குரியதாகும்.
XIX. போட்டிக்கான விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பித்தலை, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் www.dca.lk என்ற இணையதளத்திற்குச் சென்று உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவேற்றம் (Upload/Download) செய்வதன் மூலம் மேற்கொள்ள வேண்டும்.
XX. இப்போட்டியில் பங்குபற்றுவதற்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.
XXI. போட்டியின் அனைத்து விடயங்கள் தொடர்பிலான இறுதித் தீர்மானமும் சம்பந்தப்பட்ட போட்டிப் பிரிவுக்குரிய நடுவர் சபைக்குரியதாகும் அதேவேளை, அரச கட்புலக் கலைக்குழு அதற்காக எவ்வகையிலும் தலையிடாது.
XXII. அரச கட்புலக் கலைகள் விருது விழாவின் ஒரு அங்கமாக நடத்தப்படும் அரச புகைப்பட விருது விழாவில், சம்பந்தப்பட்ட வெற்றியாளர்களுக்குப் பரிசுகள், விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் இடம்பெறும்.
XXIII. இந்த ஆவணத்தின் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளின் பொருள்களுக்கு இடையே ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், சிங்கள மொழி ஆவணமே மேலோங்கும்.
படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும் ஆரம்பத் திகதி: 2026 ஜூலை 15
படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி: 2026 ஓகஸ்ட் 31
அரச கட்புலக் கலைகள் குழு
கலாசார அலுவல்கள் திணைக்களம்
8 ஆம் மாடி, செத்சிரிபாய,
பத்தரமுல்ல.
கே.எஸ். தில்ஹானி
பணிப்பாளர்
கலாசார அலுவல்கள் திணைக்களம்