*இந்த சுற்றறிக்கையின் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி உரைகளுக்கு இடையில் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், சிங்கள மொழி உரையே மேலோங்கும்.
ஆக்கங்கள் சமர்ப்பித்தல்
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச கட்புலக் கலை குழுவால் ஏற்பாடு செய்யப்படும் அர ஓவியம் மற்றும் சிற்ப விழாவிற்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி 2025 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி ஆகும்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பதாரியின் கடவுச்சீட்டு அளவிலான உங்களுடைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் (2x2 அங்குலம், 600x600 pixels) புகைப்படம் அனுப்புதல் வேண்டும்.
அனுப்பப்படும் படைப்பு ஒரு ஓவியமாக இருந்தால், படைப்பின் தெளிவான புகைப்படங்கள் 02 உம் (1920x1080 pixels) ஒரு சிற்பம் அல்லது நிறுவலாக இருந்தால், முன், பின் மற்றும் இருபுறமும் எடுக்கப்பட்ட 04 புகைப்படங்கள் (1920x1080 pixels) நிகழ்நிலையில் (Online) சமர்ப்பிக்கப்பட வேண்டும்,
உங்கள் படைப்புகள் சமர்ப்பிக்க நிகழ்நிலை (Online) முறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதைச் செய்ய, https://www.dca.lk என்ற வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் கிடைக்கும் கூகிள் படிவத்தைப் (Google Form) பயன்படுத்த வேண்டும்.
போட்டித் தன்மை
போட்டிக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்து படைப்புகளும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் புகைப்படங்களின் அடிப்படையில் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளின் அசல் படைப்புகள், கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் அறிவிக்கப்படும் திகதியில் கொழும்பு 07 இல் உள்ள தேசிய கலா பவனத்திற்கு (கண்காட்சிக்கு ஏற்ற முறையில் தயாரிக்கப்பட்டு) கொண்டு வரப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
மூலப் படைப்புகளின் இரண்டாம் சுற்று மதிப்பீட்டிற்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சியில் வழங்கப்படும்.
இரண்டாவது சுற்றில், ஒவ்வொரு போட்டிப் பிரிவிலும் வெற்றிபெறும் வடிவமைப்புகளுக்கு விருதுச் சான்றிதழ்கள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்படும்.
போட்டி நிபந்தனைகள்
01. இது 18 வயதிற்கு மேற்பட்ட திறந்த போட்டியாகும்;.
02. 2024 முதல் 2025 வரை உருவாக்கப்பட்ட ஓவிய மற்றும் ஆக்கக் கலைப் படைப்புகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
03. ஒவ்வொரு போட்டிப் பிரிவின் கீழும் வழங்கப்படும் விளக்கங்களுக்கு உட்பட்டு, அவர்கள் விரும்பும் கருப்பொருளில் படைப்புகளை சமர்ப்பிக்கலாம்.
04. ஒரு போட்டிப் பிரிவிற்காக ஒரு ஆக்கம் மாத்திரமே சமர்ப்பித்தல் வேண்டும்.
05. ஒரே ஆக்கம் பல போட்டிப் பிரிவுகளுக்கு சமர்ப்பிக்க முடியாது, மேலும் வடிவமைப்பு சமர்ப்பிக்கப்படும் போட்டிப் பிரிவு தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். விண்ணப்பதாரர் குறிப்பிடும் போட்டிப் பிரிவுக்கும் வடிவமைப்பிற்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் படைப்பு நிராகரிக்கப்படலாம்.
06. விண்ணப்பப்படிவத்தின் தகவல்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் சரியாகவும் தெளிவாகவும் வழங்கவேண்டும். தகவல்கள் பிழையாகவோ அல்லது தெளிவற்றதாகவோ இருப்பின் போட்டியில் இருந்து நிராகரிக்கப்படும்.
07. படைப்புகள் சமர்ப்பிக்கும்போதும், மீண்டும் எடுத்துச்செல்லும் போதும், கண்காட்சி கூடத்திற்குள் எடுத்துச்செல்லும்போதும் மற்றும் படைப்புகள் கண்காட்சிக்காக தயார்படுத்தலின்போதும் படைப்பாளி சமூகமளித்தல் கட்டாயமானதாகும். கண்காட்சிக்கு மறுநாள் உங்கள் ஓவியப்படைப்புகள் கண்காட்சி மண்டபத்திலிருந்து அகற்றப்பட வேண்டும், மேலும் அகற்றப்படாத கலைப்படைப்புகளுக்கு கலாசார அலுவல்கள் திணைக்களம் பொறுப்பேற்காது.
பொதுவான நிபந்தனைகள்
01. போட்டியாளர்கள் அரச சிற்ப ஒவிய விழா தொடர்பான அனைத்து நிபந்தனைகளுக்கும் இணங்க வேண்டும்.
02. ஆரச சிற்ப விழாவில் அனைத்து தீர்ப்புகளும் இந்த நாட்டில் ஓவியக் கலைத் துறையில் நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் கொண்ட நடுவர் குழுவால் நடத்தப்படுகின்றன, மேலும் நடுவர் குழுவால் எடுக்கப்படும் முடிவுகள் இறுதியானவை.
03. அரச சிற்ப விழாவிற்காக சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகளின் சட்டப்பூர்வ உரிமையை விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய கூகிள் படிவத்தில் (Google Form) உறுதிப்படுத்த வேண்டும்.
04. படைப்புகள் தொடர்பான சட்ட சிக்கல்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், படைப்புகளை நடுவர் குழுவிற்கு சமர்ப்பிக்கலாமா வேண்டாமா என்பது குறித்தும், அந்தப் படைப்புகளுக்கு விருதுகளை வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்தும் இறுதி முடிவை எடுக்க அரச கட்புலக் கலை குழு மற்றும் கலாசார அலுவல்கள் பணிப்பாளருக்கு உரிமை கொண்டுள்ளனர்.
05. தேவையான சாதனை அளவை அடையத் தவறினால் அல்லது போட்டி நிபந்தனைகளை மீறினால் அல்லது பிற சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டால், போட்டி வகைகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள நிதிப் பரிசுகள், விருதுகள், சான்றிதழ்களை வழங்கவோ வழங்கவோ அரச கட்புலக் கலை குழு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது.
06. அரச கட்புலக் கலை குழுவின் உத்தியோகத்தர், ஆக்கங்கள் நடுவர் குழு உறுப்பினர், இலங்கை கலை கழகம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் அல்லது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அரச ஓவியம் மற்றும் சிற்ப விழாவிற்கு விண்ணப்பிக்க முடியாது.
07. அரச ஓவியம் மற்றும் சிற்ப விழா தொடர்பான கூடுதல் தகவல்களை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாசார மற்றும் கலை மேம்பாட்டுப் பிரிவிலோ அல்லது நாட்டின் எந்த மாவட்டச் செயலகம் / பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கலாசார அலுவலரிடமோ பெறலாம்.
தொடர்புகளுக்கு
செயலாளர், அரச கட்புல கலை ஆலோசனைக்குழு 011-2882551
Website :- www.dca.lk
Facebook :- https://www.facebook.com/culturaldept.gov.lk
கே.எஸ். தில்ஹானி
பணிப்பாளர்
கலாசார அலுவல்கள் திணைக்களம்